காவல் நிலையம் முன்பு பற்றி எரிந்த வாலிபர் உடல்: மனைவியை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளித்ததால் பரபரப்பு!


காவல் நிலையம் முன் தீக்குளித்த மணிகண்டா.

ஆந்திரா மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர் மணிகண்டா. இவருடைய மனைவி துர்கா. இவருக்கும் சோனு என்பவருக்கும் இடையே ரகசிய தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் கணவனைப் பிரிந்து காதலனுடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து தனது மனைவியை பல இடங்களிலும் மணிகண்டா தேடிபார்த்துள்ளார். அப்போது, சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாக்கரா பேட்டையில் சோனுவுடன் அவர் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தனது மனைவியை எப்படியாவது மீண்டும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்த மணிகண்டா திருப்பதி அருகே உள்ள சந்திரகிரிக்கு வந்தார். காவல் நிலையத்திற்கு சென்ற அவர், பாக்கராபேட்டையில் சோனவுடன் வசிக்கும் தனது மனைவியை மீட்டு கொடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

ஆனால், அங்கு அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் சீனிவாஸ், அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. மேலும், மீண்டும் இங்கு வந்து புகார் கொடுக்க முயற்சித்தால் உன்னைத் தூக்கி உள்ளே போட்டுவிடுவேன் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டா அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பாட்டிலில் திரும்பிய அவர், காவல் நிலையம் எதிரே நின்றபடி தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் பற்றி எரியும் தீயுடன் காவல் நிலையத்தை நோக்கி ஓடி வந்த அவரைப் பார்த்த போலீஸார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக தீயை அணைத்து திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மணிகண்டாவுக்கு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகார் கொடுக்க வந்த மணிகண்டாவிடம் போலீஸார் நடந்து கொண்ட விதம் பற்றி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

x