தனது காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்த காதலன் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வருபவர் ஹெத்தேர் ஸ்சவாபி. 35 வயதான இவருக்கு சாட் ஸ்டிவன்ஸ் ( 42) என்ற ஆண் நண்பர் இருந்துள்ளார். இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.
இவருக்கும் ஹெத்தேருக்கும் இடையே போதைப்பொருள் விவகாரத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். இது குறித்து ஹெத்தேரின் தாய்க்கு தெரியவர, அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென ஹெத்தேரை காணவில்லை, இதனால் அவரது தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். போலீஸார் கடந்த 5 மாதமாக தேடி வந்தனர். பின்னர், விசாரணையில் அவர் தனது ஆண் நண்பரின் வீடு உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் மெக் கென்னடி நகருக்கு குடிபெயர்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து காதலரிடம் விசாரித்தபோது, காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரது வீட்டை சோதனை செய்தபோது, கதவுக்கு பின்பக்கம் அறையொன்று மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குள் பிரிட்ஜை வைத்து காதலியின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து உடனடியாக போலீஸார் அவரை கைது செய்தனர்.
இருவருக்கும் என்ன பிரச்சினை? ஏன் அவரை கொலை செய்தார்? எதற்காக இத்தனை நாட்களாக உடலை பாதுகாத்து வைத்திருந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.