பஞ்சாப்பில் அதிர்ச்சி... ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை!


ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் குர்பிரீத் சிங் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் குர்பிரீத் சிங் என்ற கோபி சோஹ்லா. இவர், இன்று காலை வழக்கு விசாரணைக்காக கபுர்தலா மாவட்டம், சுல்தான்பூர் லோதியில் உள்ள நீதிமன்றத்துக்கு காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

குர்பிரீத் சிங், தர்ன் தரன் மாவட்டம், சிங் ஃபதேஹ்பாத் - கோயிந்த்வால் சாஹிப் இடையே உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கியால், குர்பிரீத் சிங் மீது கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

துப்பாக்கிச்சூடு

இதில் குர்பிரீத் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்த, டிஎஸ்பி ரவிஷர் சிங் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க, தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு முன் விரோதம் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் பட்டப் பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

x