பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல சாசக வீரர் 68வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லுசிடி, உயரமான கட்டிடங்கள், டவர்களில் ஏறி சாகசம் செய்து வந்துள்ளதோடு அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சீனாவில் ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 68-வது மாடியில் இருந்து ரெமி சாகசம் செய்திருக்கிறார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது கேமிராவை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
அப்போது தனது நண்பரை பார்க்க வந்ததாக கூறி அடுக்குமாடி குடியிருப்பிற்கு ரெமி சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 68-வது மாடிக்கு சென்ற போது கதவைத் தட்டி அங்கிருந்த பணிப்பெண்ணிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், அந்த பணிப்பெண் பயத்தில் உதவாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதற்குள் ரெமி கால் தவறி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
விடுமுறைக்காக வந்திருந்த ரெமி, ஹாங்காங்கில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். விடுதியின் உரிமையாளர், குர்ஜித் கவுர், அவரிடம் அன்பாக பழகியுள்ளார். "நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன்" என்று கவுர் கூறியுள்ளார். அவர் லூசிடியுடன் பலமுறை பேசியதாகவும், ஹாங்காங்கில் நிறைய நடைபயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியதாக விடுதியில் பணிபுரிபவர் கூறியுள்ளார்.
"அவர் எங்கு செல்கிறார் என்று நான் கேட்ட போது, தான் மலையேறப் போவதாக என்னிடம் கூறினார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.