தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!


தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரம் ஆதீனம்

மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இங்கு 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு சிலர் மிரட்டி உள்ளனர். இந்த மிரட்டல் குறித்து மடாதிபதியின் சகோதரர் விருதகிரி போலீஸில் 9 பேர் மீது புகார் அளித்திருந்தார்.

தருமபுரம் ஆதீனம்

இதன் பேரில் மடாதிபதியின் உதவியாளர் செந்தில், பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திமுக செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதன் அடிப்படையில் ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, ரவுடி விக்னேஷ், ஸ்ரீனிவாஸ் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

x