கூடுதல் விலைக்கு மதுபானம் - டாஸ்மாக் விற்பனையாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் @ திருப்பத்தூர்


திருப்பத்தூர்: டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 6 விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் திருப் பத்தூர் மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் நிர்ணயிக் கப்பட்ட விலையை காட்டிலும், கூடுதல் விலைக்கு மதுபானங் கள் விற்பனை செய்யப்படுவ தாக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு புகார்வந்தது.

இதையடுத்து, ஆட்சியர் தர்ப்பகராஜ் அளித்த உத்தரவின் பேரில், சேலம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் திருப் பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கடந்த வாரம் ஆய்வு நடத்தினர்.

இதில், 6 மதுபானக் கடை களில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் ஒரு பாட்டிலுக்கு மேல் கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர்களான அனந்தநாராயணன், மாய கேசவன், சீனிவாசன், கோவிந்த ராஜி, இளங்கோ, விநாயகம் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு, திருப்பத்தூர் ஆட்சியர் தர்ப்பகராஜ் நேற்று உத்தரவிட்டார்.

x