சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் மாணவர்களை மசாஜ் செய்ய வற்புறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜாஷ்பூர் மாவட்டம் சந்த்ரிமுண்டா கிராமத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர், மாணவர்களை மசாஜ் செய்துவிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர்களை அடித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் போலீஸாரிடம் புகாரளித்தனர்.
தொகுதி கல்வி அலுவலர் இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) சஞ்சய் குப்தா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பகுதியின் கல்வி ஒருங்கிணைப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், மேல் விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.