சந்தன மரம் கடத்திய ஐந்து பேர் வனத்துறையினரிடம் சிக்கினர்; நீலகிரியில் அதிரடி!


சந்தன மரம் கடத்திய ஐந்து பேர் வனத்துறையினரிடம் சிக்கினர்; நீலகிரியில் அதிரடி

நீலகிரியில் சந்தன மரம் வெட்டி கடத்திய ஐந்து பேர் கட்டப்பட்டு வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களால் வெட்டப்பட்ட சந்தன மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்ததுடன், அவர்களுக்கு 2,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் 60% வனப்பகுதிகளை கொண்டதாகும். இந்த வனப்பகுதிகளில் அரிய வகை மரங்களான சந்தனம், ஈட்டி, தேக்கு போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. அதிலும், சந்தன மரங்கள் சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்நிலையில், கட்டப்பட்டு வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனவர் சிவன் மற்றும் வனக்காப்பாளர்கள் வினோத் குட்டன் ஆகியோர் கூக்கல்தொரை பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குஞ்சப்பனைப் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (29), சௌந்தர பாண்டியன் (35), செல்வன் (36), கூக்கல்தொரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (31), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் (58) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களால் வெட்டப்பட்ட சந்தன மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் அபராதமாக 2,20,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

x