தங்கை வெட்டிக்கொலை; துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்ற அண்ணன்


தங்கை வெட்டிக்கொலை; துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்ற அண்ணன்

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில், தனது சகோதரியின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உ.பி.யின் பாரபங்கியில் ஃபதேபூர் பகுதியில் உள்ள மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரியாஸ் (22) மற்றும் அவரது சகோதரி ஆஷிஃபா (18). ஆஷிஃபா சமீபத்தில் அதே கிராமத்தில் வசிக்கும் தனது காதலரான சந்த் பாபுவுடன் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு போலீசார் ஆஷிஃபாவை மீட்டு, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபுவை சிறையில் அடைத்தனர்.

ஆஷிஃபா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். ஆனால், ரியாஸ் தனது சகோதரியின் உறவை எதிர்த்தார். எனவே இது தொடர்பாக இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் கூரிய ஆயுதத்தால் தனது சகோதரியின் தலையை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அவரது தலையை கையில் வைத்துக் கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று தேவையான ஆதாரங்களைச் சேகரித்த பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக ஏஎஸ்பி தெரிவித்தார்.

x