தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் சோதனை: 3 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை: சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான தேவநாதன் யாதவை அவரது அலுவலகத்துக்கு அழைத்து வந்து, சோதனை மேற்கொண்டதாகவும், இதில் 3 கிலோ தங்கம்,35 கிலோ வெள்ளி பொருட்கள், 15 நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல், பூங்காநகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் தேவநாதன் தொடர்புடையை இடத்தில் சோதனை நடந்தது.

x