பப்புவா நியூ கினியாவில் இரு பழங்குடியினர் சமூகத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 64 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் உள்ள சிக்கின் மற்றும் கெய்கின் ஆகிய இரு பழங்குடியினர் இடையே மிக அதிக ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. இரண்டு குழுவினரும் அவ்வபோது பயங்கரமாக தாக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது.
நேற்று அதிகாலையில், போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வபாக் நகருக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோதலில் ஏகே 47 போன்ற நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று வரை 64 பேரின் சடலங்கள் கிடைத்திருப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு 60 பேரைக் கொன்ற மோதல்களுக்கும், இந்த பழங்குடியினரே காரணம் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
நிலத்தையும், அந்த பகுதியில் உள்ள வளங்களையும் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சிக்கின் மற்றும் கெய்கின் பழங்குடியினருக்கிடையே மோதல் வெடித்துள்ளது. அந்த பகுதிகளில் மோதல் தொடர்பான நிலைமையை சமாளிக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ராணுவத்தினரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதத்திலும் இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் ஏற்பட்டது. அப்போது, 3 மாதங்களுக்கு எங்காவ் பகுதி முழுவதும் காவல்துறை ஊரடங்கு உத்தரவும், பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!
அடுத்தக் கட்ட அதிரடி ... நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் இன்று திடீர் ஆலோசனை!
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?... விமான நிலையத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி!