டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒடிசாவில் ரயில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள படேல் நகர்- தயாப்ஸ்தி பிரிவில் சரக்கு ரயில் ஒன்று இரும்பு கம்பிகள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தடம்புரண்டு சரக்கு ரயில் விபத்திற்குள்ளானது.
சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட 8 பெட்டிகளில் உள்ள பொருட்களை அகற்றவும், ரயில் பெட்டிகளை மீட்கவும் ரயில்வே துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சில ரயில்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே இந்த ரயில் கவிழ்ந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பாரம் காராணமாக இந்த விபத்து நடைபெற்றதா அல்லது பிரேக் பெயிலர் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!