விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து... 10 பேர் பலியான பரிதாபம்


பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்த வெடி மருந்துகள், வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆலையில் பணி செய்து கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை விபத்தில் 4 கட்டடங்கள் இடிந்து சேதம்

படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த விபத்தில் 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனை

இதுவரை 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையின் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக பட்டாசு வெடி விபத்துக்கள் அதிகரித்து வருவது தொழிலாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

x