காதலர் தினமான இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு தாலி கட்டும் போராட்டத்தை இந்து அமைப்பினர் அறிவித்தனர். இதனால் பிரச்சினை வெடித்துவிடாமல் இருக்க கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளை போலீஸார் திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இது கலாசார சீரழிவு என்று சொல்லி இந்து அமைப்பின்ர் எதிர் தெரிவித்து வருகின்றனர். காதலர் தினத்தன்று பொது இடங்களுக்கு வரும் காதலர்களுக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் உள்ள பிரசித்தி பெற்ற பெருவுடையார் கோயிலுக்கு இன்று ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதில் ஏராளமான காதல் ஜோடிகளும் இருந்தனர். இங்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் கையில் தாலியுடன் காத்திருந்தனர்.
ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தாலியுடன் வந்தவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தாலியுடன் நின்றவர்களைப் பார்த்துவிட்டு காதல் ஜோடிகளும் தலைதப்பி ஓடினர். இந்த விஷயம் தெரியாமல் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளையும் போலீஸார் அறிவுரை கூறிய திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் தஞ்சை பெரிய கோயில் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடிய 35,000 பேர்... அதிர்ந்து போன அமீரகம்!