மும்பையில் 10 வயது சிறுவன், வாளியில் நிரம்பிய தண்ணீரில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நவி மும்பையின் பன்வெல் பகுதியில் உள்ள பலஸ்பே பகுதியில் இந்த துயர சம்பம் அரங்கேறி உள்ளது. பள்ளி விடுமுறையை முன்னிட்டு நேற்று மாலை, அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன், வீட்டின் உள்ளேயும் வெளியேயுமாக சிறிய பந்து ஒன்றை வைத்து விளையாடி வந்திருக்கிறான். அப்போது வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளி ஒன்றில் அவனது பந்து விழுந்து விட்டது.
சற்றே அளவில் பெரிய அந்த வாளியில், அப்பகுதியின் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக அவனது பெற்றோர் எப்போதும் தண்ணீர் நிரப்பியே வைத்திருப்பார்கள். அந்த வாளியில் விழுந்த பந்தினை எடுக்கும் முயற்சியில் 10 வயது சிறுவன் தவறி உள்ளே விழுந்தான்.
தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் விழுந்த வேகத்தில் வாளியின் குறுகலான உட்புற அடிப்பகுதியில் கால்கள் மாட்டிக்கொண்டதில், சிறுவன் தண்ணீரில் மூழ்கி மூச்சுக்குத் தடுமாறித் தவித்தான். சற்று நேரம் கழித்தே விளையாடிக்கொண்டிருந்த மகனைத் தேடிய அவனது தாயார், தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் மகனைக் கண்டு அதிர்ந்து போனார்.
சிறுவன் மயங்கி கிடப்பதாக கருதி அவனை அருகிலுள்ள மருத்துவனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். எனினும் சிறுவனின் போஸ்ட்மார்டம் அறிக்கை மட்டுமே இறப்புக்கான காரணத்தை உறுதி செய்யும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!