கடனுக்காக மகளை தூக்கிச்சென்ற நிதி நிறுவன ஊழியர்; பதறிய தந்தை: போலீஸ் காட்டிய அதிரடி


தந்தை வாங்கிய கடனுக்காக மகளை தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்கிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மருதூரைச் சேர்ந்தவர் வனத்துராஜா. கூலித் தொழிலாளியான இவர், கீரனூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். மாதம் தோறும் 2,500 ரூபாய் தவணை முறையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இதனிடையே, ஜூன் மாதத்துக்கான தவணை தொகையை வடக்கு ராஜாவால் செலுத்த முடியவில்லை.

பணத்தை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ் நேற்று வனத்துராஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் வனத்துராஜா இல்லை. வீட்டில் அவரது 11 வயது மகள் ஜனனி இருந்துள்ளார். அவரிடம் தந்தை குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து, சிறுமி ஜனனியை அலுவலகத்திற்கு தூக்கிச் சென்றுவிட்டார் விக்னேஷ். இதையடுத்து, வீட்டிற்கு வந்த வனத்துராஜா மகள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது, அவரது செல்போனில் பேசிய விக்னேஷ், தவணை தொகையை கட்டினால் தான் உங்கள் மகளை விடுவிப்போம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, கீரனூர் காவல்துறையில் வனத்துராஜா புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நிதி நிறுவனத்துக்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த சிறுமியை மீட்டு விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தை வாங்கிய கடனுக்கான மகளை தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்கிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x