பூங்கா வந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பலாத்காரம்: சிறுவன் உள்பட மூவர் கைது


சிறுமி பலாத்காரம்

டெல்லியில் 16 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஒரு சிறுவன் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

வடமேற்கு டெல்லியில் பூங்காவிற்கு தனது தோழியுடன் 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. சிறுமியுடன் வந்த அவரது தோழியை விரட்டி விட்டு 16 வயது சிறுமியை ஷஹபாத் பால் பண்ணைப் பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை அவர்கள் நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய் துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் அடையாளத்தையும் கண்டுபிடித்தனர். அதில் ஷஹபாத் பால் பண்ணைப் பகுதியைச் சேர்ந்த பாபி, ராகுல் என்ற வாலிபர்களையும், ஒரு சிறுவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," நேற்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தோழியுடன் சென்ற சிறுமியை தூக்கிச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரைத் தேடி வருகிறோம். சிறுமியுடன் சென்ற தோழியைத் தேடி வருகிறோம்" என்றனர்.

x