பில்லி, சூனியம் வைத்ததாக சந்தேகம்: தந்தையைப் பிடிக்க மகன் வைத்த கேமிராவில் சிக்கிய பலாத்கார காட்சி!


சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்.

தந்தை தனக்கு பில்லி, சூனியம் வைக்கிறாரா எனக் கண்டறிய அவரது அறையில் செல்போன் கேமிராவை அவரது மகன் ரகசியமாக பொருத்தினார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அந்த கேமிரா மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள புராரியில் 68 வயது தந்தை, தனக்கு பில்லி, சூனியம் வைத்ததாக அவரது மகன் சந்தேகப்பட்டார். இதனால் அவரைக் கையும், களவுமாகப் பிடிக்க அவரது அறையில் தனது செல்போன் கேமிராவை பொருத்தி ரகசியமாக படம் பிடித்தார். அப்படி பதிவான காட்சிகளைப் பார்த்த மகன் அதிர்ந்து போனார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த மைனர் பெண்ணை தனது தந்தை பலாத்காரம் செய்த காட்சி அதில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்த வீடியோவை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு வாட்ஸ் அப்பில் முதியவரின் மகன் அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, டெல்லி காவல் துறையில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 68 முதியவர், செல்போனில் படம் எடுத்து அதைப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு அனுப்பிய முதியவரின் மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," பாலியல் குற்றம் ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. பாதிக்கப்ப்டட சிறுமியின் தந்தை ஜூன் 27-ம் தேதி புராரி காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது மகளைப் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 68 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறிய போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி முதியவரையும், அவரது மகனையும் நேற்று கைது செய்தோம்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x