கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து போதைக்காளான் விற்பனை: கேரளா வாலிபர் உள்பட 4 பேர் கைது!


கைது செய்யப்பட்டவர்கள்.

கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனையில் ஈடுபட்ட கேரளா மாநில வாலிபர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா வரும் பயணிகளைக் குறிவைத்து சில சமூக விரோதக் கும்பல் கஞ்சா மற்றும் போதை வஸ்துகளை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இதனைத் தடுக்க போலீஸார் தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மலைப்பகுதிகளைப் பயன்படுத்தி இந்த கும்பல் தொடர்ந்து போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கொடைக்கானல் அருகே பூம்பாறை பகுதியில் போதைக் காளான் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு, பிரசாத், முகம்மது மற்றும் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் ஆகியோர் சுற்றுலாப் பயணிகளிடம் போதைக் காளான் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த கொடைக்கானல் போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x