திருமணம் செய்வதாக கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய பி.டெக் மாணவர் கைது!


பி.டெக் மாணவர் கைது

காதலிப்பதாக ஏமாற்றி கல்லூரி மாணவியைக் கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த மாணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை, பேரையூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி குப்பாபுலி. இவரது மகன் வாசுராஜா(23). இவர் நாமக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை வாசுராஜா காதலித்து வந்தார்.

இந்த காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி தனிமையில் ஊர் சுற்றினர். அப்போது வாசுராஜா, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். ஆனால் வாசுராஜா சொன்னது போல் அந்த மாணவியைத் திருமணம் செய்யவில்லை.

ஒருகட்டத்தில் தன் காதலியை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையுமே தவிர்த்தார். இதுகுறித்து அந்த மாணவி, சாணர்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் விக்டோரியோ லூர்துமேரி, மாணவன் வாசுராஜாவைக் கைது செய்தார்.

கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி சகமாணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x