பெண் கவுன்சிலரும், ஆலை உரிமையாளரும் மாறி மாறி கன்னத்தில் அறைந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் தவிடு அரைக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில், ஆலையை சுற்றி மதில் சுவர் எழுப்ப சக்திவேல் முடிவு செய்துள்ளார். இதனால் அங்குள்ள கால்வாய் குறுகி தண்ணீர் செல்வது தடைபடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 7-வது வார்டு உறுப்பினர் மஞ்சுளாவுக்கும் சக்திவேல் இருவரும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இதேபோல் கடும் வாக்குவாதம் ஏற்படவே மாறி மாறி இருவரும் கன்னத்தில் அறைந்து கொண்டனர். அங்கிருந்தவர்களை இருவரையும் விலக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.