குளத்தில் கட்டு கட்டாகக் கிடந்த 2000 ரூபாய் தாள்கள்: கடைசியில் நடந்த திருப்பம்


நாகர்கோவில் அருகில் உள்ள வேம்பனார் பகுதியில் உள்ள குளத்தில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி வலையில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் கிடைத்தன. கடைசியில் அது போலியானது எனத் தெரியவந்தது.

நாகர்கோவில் அருகில் உள்ள வேம்பனூர் பகுதியில் பெரியகுளம் உள்ளது. இங்கு இன்று உள்நாட்டு மீனவர்கள் சிலர் வலை விரித்து மீன்பிடித்தனர். அப்போது பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்று கிடைத்தது. அதில் ஏராளமான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் முழுக்க நனைந்த நிலையில் இருந்தன.

அண்மையில் ஆர்.பி.ஐ திரும்பப் பெற்றதால் யாரோ மித மிஞ்சி பதுக்கி வைத்து இருந்த 2000 ரூபாய் தாள்களைத் தூக்கி வீசி இருக்கலாம் என போலீஸூக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இரணியல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். ரூபாய் தாள்களின் மேல் கனரா பேங்க் ஸ்லிப்கள் இருந்தாலும், அந்த தாள் போலியானது. அந்த பணத்தாள்களின் மேல் சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவை பார்க்க உண்மையானது போலவே இருந்ததே இந்த சர்ச்சைக்கும் காரணம் ஆனது. இதனைத் தொடர்ந்து அந்த போலி தாள்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x