9 வயது சிறுவனிடம் தவறாக நடந்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் அதிரடி


தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை

9 வயது சிறுவனிடம் தகாதமுறையில் நடந்து கொண்ட தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த சேகர்(40). தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனிடம் கடந்த 2019-ம் ஆண்டு தகாத முறையில் நடந்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் செங்கோட்டை போலீஸார், சேகரை போக்சோ சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிந்து சாட்சியங்கள் அடிப்படையில் நீதிபதி அன்புச்செல்வி நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு சார்பில் போக்சோ சிறப்பு வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.

x