சொத்துக்காக தூக்க நிலையிலேயே தந்தை கொலை: மகன் கைதான நிலையில் முதல் மனைவியும் கைது!


கணவர் கொலை வழக்கில் மனைவி கைது

காரைக்குடி அருகே சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன் கைதான நிலையில், தாயையும் கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் அடைக்கலம். இவரது முதல் மனைவி செல்லம்மாள். மகன் முருகேசன். செல்லம்மாளும், முருகேசனும் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில் அடைக்கலம், சிகப்பி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் அடைக்கலத்திற்கும், அவரது மகன் முருகேசனுக்கும் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அடைக்கலத்தை, முருகேசன் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக முருகேசனும், அவரது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தலைமறைவாகியிருந்த முருகேசனின் தாய் செல்லம்மாளையும் சாக்கோட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x