பெண்ணின் கழுத்தில் கிடந்த 10 சவரன் நகை பறிப்பு: சென்னை புறநகர் ரயிலிலிருந்து தப்பியோடிய கொள்ளையன்


பெண்ணிடம் 10 சவரன் நகையை பறித்துவிட்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் அண்மை காலமாக வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. அண்மையில் சைதாப்பேட்டையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நகைகளை பறித்துச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் திருமுல்லைவாயலை சேர்ந்த வளர்மதி என்ற பெண் பயணித்துள்ளார். ரயில் பேசின ப்ரிட்ஜ் ரயில் நிலையம் வந்தது நின்றது. இதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் நிலையத்தை ரயில் கடப்பதற்குள் கொள்ளையன் ஒருவன் வளர்மதி அணிந்திருந்த 10 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு ஓடும் ரயிலில் தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஓடும் ரயிலில் இருந்து நகைகளை பறித்துக்கொண்டு கொள்ளையன் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x