கோழிப்பண்ணை கிணற்றில் இருந்து தாய், 3 மகள்கள் உடல்கள் மீட்பு: கொன்று வீசப்பட்டனரா?


கோழிப்பண்ணையில் போலீஸ் விசாரணை

மகாராஷ்டிராவில் உள்ள கோழிப்பண்ணை கிணற்றில் தாய் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகரில் உள்ள பாபுல்கானில் தீபக் கோலக் மாலி என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஐந்து குடும்பங்கள் தங்கி வேலை செய்து வந்தன. இதில், நாந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்த தம்மபால் சங்கடே குடும்பமும் ஒன்று. சங்கடே தனது மனைவி காஞ்சன், மூன்று குழந்தைகளுடன் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கோழிப்பண்ணையில் உள்ள கிணற்றில் மோட்டார் போடுவதற்காக ஊழியர் சென்றார். அப்போது கிணற்றில் சங்கடே மகள் பிணமாக மிதந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், போலீஸாருக்கு த் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அங்கு வந்த போது காஞ்சன் தனது 3 குழந்தைகளுடன் காணாமல் போனது தெரிய வந்தது. அதில் ஒரு குழந்தை கிணற்றில் மிதந்ததால், சங்கடேவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது நேற்று இரவு தனது மனைவி காஞ்சனுடன் தகராறு ஏற்பட்டதாக அவர் கூறினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பார் ராகேஷ் ஓலா, கோழிப்பண்ணையை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் சந்தோஷ் முட்குலோ தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட போது காஞ்சனும், அவரது மூன்று குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டது. மனைவியுடன் சேர்ந்து தனது மூன்று குழந்தைகளை சங்கடே கொலை செய்து கிணற்றில் வீசினாரா அல்ல து காஞ்சன் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய் து கொண்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x