வரதட்சணை கேட்டு கொடுமை; ராணுவ வீரர் மீது பாய்ந்தது வழக்கு


வரதட்சணை கேட்டு கொடுமை: ராணுவ வீரர் மீது பாய்ந்தது வழக்கு

விருதுநகர் மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த ராணுவ வீரர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஓ.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. ஐந்து வருடங்கள் காதலித்து இவர்கள் திருமணம் செய்தனர். காதலிக்கும்போதே திருமண ஆசைகாட்டி சாமுண்டீஸ்வரியை பலமுறை வன்கொடுமை செய்த நாகராஜ், கடைசியில் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். இதனால் கடந்த 2022ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது புகார் கொடுத்து இருந்தார். அதில் போலீஸாரின் உத்தரவுக்குப் பின்பு தான் நாகராஜ், சாமுண்டீஸ்வரியைத் திருமணம் செய்தார்.

இந்நிலையில் சாமுண்டீஸ்வரியோடு ஒருமாதம் குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் ராணுவ வேலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் நாகராஜ் உடன் சேர்ந்து வாழவேண்டும் என்றால் 50 பவுன் நகைகள், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக தரவேண்டும் என நாகராஜின் அம்மா வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் சாமுண்டீஸ்வரியை வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். ஒருகட்டத்தில் ராணுவத்தில் வேலைசெய்யும் நாகராஜும் வரதட்சணைக் கொடுத்தால் மட்டுமே தன்னுடன் சேர்ந்து வாழமுடியும் என சொல்லிவிட்டார். இதுகுறித்து சாமுண்டீஸ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் அவரது கணவர் நாகராஜ், மாமியார் வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x