தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே திருமணம் முடிந்த வாலிபர் காதலிப்பதாக நடித்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25) இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இதை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசியுள்ளார். அஜித்குமாரின் காதலை முழுமையாக நம்பினார் அந்த மாணவி. இந்நிலையில் அஜித்குமார் மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனிடையே வீட்டில் சிறுமியைக் காணாது, அவரது பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் அஜித்குமாரின் செல்போன் சிக்னலின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் நேரில் சென்று அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மைனர் பெண்ணை வெளியூர் அழைத்துப் போய் பாலியல் தொல்லை கொடுத்த அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.