50 கிலோ கஞ்சா பதுக்கிய பெண், ஆணுக்கு 60 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


வீட்டில் 50 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் பெண் உள்பட இரண்டு பேருக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரின் மனைவி ஜெயபாண்டியம்மாள் (30) மற்றும் ராஜேஷ் கண்ணன் (42) ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு வீட்டில் 50 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக போலீஸார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

x