உங்கள் மகளைப் பலாத்காரம் செய்துவிட்டேன்; எனக்கே திருமணம் செய்து வையுங்கள்: அதிரவைத்த வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தனக்குத் திருமணம் செய்து வைக்கக்கோரி சிறுமியின் பெற்றோரையும் மிரட்டிய வாலிபரைப் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாமிநத்தம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கூடம் சென்று வரும்போது ஈஞ்சார் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து(24) என்ற வாலிபர், மாணவியிடம் தன்னைக் காதலிக்கும்படி மிரட்டியும், கேலி செய்தும் வந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்து சிறுமியைக் கடத்தி செண்பக தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்ற மாரிமுத்து, அங்குவைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியை அவர் மிரட்டவே, பயந்துபோன அவரும் இதை வெளியில் சொல்லவில்லை. இந்தநிலையில் திடீரென சிறுமி வீட்டுக்கு வந்த மாரிமுத்து, அவரது தாயிடம் உங்கள் மகளைப் பலாத்காரம் செய்துவிட்டேன். அதனால் எனக்கே திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டார். இதற்கு சிறுமியின் தாய் மறுப்பு தெரிவிக்கவே அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருக்கும் அவரைத் தேடி வருகின்றனர்.

x