ரயில் பயணி பையில் ரூ.29 லட்சம் ரொக்கப்பணம்... ரயில்வே போலீஸாரின் சோதனையில் அதிர்ச்சி!


விருதுநகர் சந்திப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீஸார் நடத்திய சோதனையின் போது, பயணி ஒருவர் வைத்திருந்த பையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணிகளை ரயில்வே போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் ரயில் நிலையத்தில் ஹவுரா-கன்னியாகுமரி விரைவு ரயிலில் போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது பயணி ஒருவரின் பையை சோதனையிட்ட போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

ரயில்

விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த சாம்பாஜி (55) என்பதும், நாகர்கோவிலை சேர்ந்த நகைக்கடைக்காரர் கோலப்பன் என்பவர் மதுரையில் நிவாஷ் என்பவரிடம் உருக்கிய தங்கத்தை கொடுத்ததாகவும், அதற்குரிய பணத்தை சம்பாஜியை பெற்று வரச் சொன்னதாகவும் தெரிய வந்தது.

இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பணம் பறிமுதல்

இதையும் வாசிக்கலாமே...

x