புதுச்சேரி கடல்பகுதியில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் அலைகள் சிவப்பாக மாறியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இவ்வாண்டில் 5வது முறையாக இவ்வாறு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கிலோமீட்டர் பகுதி கடந்த ஓராண்டில் மட்டும் 5 முறை நிறம் மாறியுள்ளது. வழக்கமான நீல நிறத்திற்கு மாற்றாக ரத்தச்சிவப்பு நிறத்தில் கடல் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியின் விடுதலை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க வந்த மக்கள், கடல் செந்நிறத்தில் காட்சியளித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
கடல் நிறம் மாறியுள்ளதை அடுத்து, பொதுமக்கள் கடலில் குளிக்க வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட வகையான ஆல்கே எனப்படும் உயிரினங்களின் வரத்து அல்லது மண் அரிப்பு காரணமாக இந்த நிறம் மாற்றம் ஏற்பட்டிருக்கலம் என கூறப்படுகிறது. இருப்பினும் விடுமுறை நாளில் கடலை ரசிக்க வந்த மக்கள், நிறம் மாறியுள்ளதால் அதிர்ச்சியடைந்து ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!