பெங்களூரில் சொத்துப் பிரச்னையில் இரண்டு தொழிலதிபர்கள் கொடூரமான முறையில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கும்பார்பேட்டை மெயின் ரோட்டில் நேற்று நள்ளிரவு இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது. கொலை செய்யப்பட்டவர்கள் சொத்து பிரச்சினையால் இரண்டு வியாபாரிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
தகவல் அறிந்த ஹலசூரு கேட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். டிசிபி (மத்திய) சேகர் தெக்கண்ணனவரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் சுரேஷ்(55), மகேந்திரா(68) என்ற தொழிலதிபர்கள் அடையாளம் காணப்பட்டது. கும்பரா நகரில் உள்ள ஹரி மார்க்கெட்டிங்ஸ் கட்டிடத்திற்குள் இந்த கொலை நடந்ததால் அங்கிருந்தவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
பிரதான வீதியில் அமைந்துள்ள நான்குகு மாடிக் கட்டிடத்தை சமூக சங்கம் ஒன்றின்கு அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரட்டைக் கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பத்ரா என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் என்று போலீஸார் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் இரண்டு தொழிலதிபர்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.