சகோதரியை தொந்தரவு செய்தவரை தட்டிக்கேட்ட 10ம் வகுப்பு மாணவன்; பெட்ரோல் எரிக்கப்பட்ட கொடூரம்


தீ வைத்து கொலை

ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் தனது சகோதரியை துன்புறுத்திய இளைஞரை தட்டிக்கேட்ட 10 ம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பாபட்லா மாவட்டத்தில் வெங்கடேஸ்வர் என்ற 21 வயது இளைஞன், அமர்நாத் என்பவரின் சகோதரியை தொந்தரவு செந்துள்ளார். இது தொடர்பாக வெங்கடேஸ்வரனை அமர்நாத் எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரன், 15 வயதான அமர்நாத் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீவைத்துள்ளான். அமர்நாத்தை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, "வெங்கி" என்பவர் உட்பட மூன்று பேரின் பெயரைக் கூறினார். மருத்துவமனையில் அமர்நாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய பாபட்லா போலீஸ் அதிகாரி வகுல் ஜிண்டால், “ வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ்வரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலை செய்யப்பட்ட மாணவனின் சகோதரி மைனர் என்பதால் அவன் மீது கடுமையான போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.

x