8-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை: செல்போனால் சிக்கிய 3 குழந்தைகளின் தந்தை


மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை: செல்போனால் சிக்கிய 3 குழந்தைகளின் தந்தை

கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்த மூன்று குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டார். நாகர்கோவிலில் மாயமான நிலையில் நாகப்பட்டிணத்தில் இருந்து சிறுமியை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயம் ஆனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரும் மாயம் ஆகியிருப்பது தெரியவந்தது. செல்வகுமாருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளும் உள்ளன. செல்வகுமார் மாயம் ஆனதால் போலீஸாரின் சந்தேகப்பார்வை அவர்மேல் விழுந்தது. இதில் செல்வகுமாரின் செல்போன் எண்ணின் அடிப்படையில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் செல்வகுமாரின் செல்போன் சிக்னல் நாகப்பட்டினத்தில் இருப்பதாகக் காட்டியது.

இதனைத் தொடர்ந்து போலீஸார் நாகப்பட்டினம் சென்றனர். அங்கு சிறுமியை அறை எடுத்து அடைத்து வைத்து செல்வகுமார் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீஸார் நாகர்கோவில் அழைத்து வந்தனர். கடத்திச் சென்ற செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

x