மும்பையில் தேர்வு எழுதச் சென்ற 20 வயது மாணவி ஓடும் ரயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளூர் ரயிலில் நேற்று பயணம் செய்த 20 வயது சிறுமியை 40 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 7:26 மணியளவில் மஸ்ஜித் ரயில்வே ஸ்டேஷனுக்கும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையத்திற்கும் இடையில் 20 வயது மாணவி தேர்வு எழுதுவதற்காக தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்மநபர் ஒருவர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி விட்டார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், ரயில்வே பாதுகாப்புப் படையை (ஆர்பிஎஃப்) அணுகி புகார் அளித்தார். இதையடுத்து மஸ்ஜித் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆர்பிஎஃப் மற்றும் மும்பை காவல்துறையின் கூட்டுக்குழு ஆய்வு செய்து குற்றவாளியை எட்டு மணி நேரத்தில் கைது செய்தனர்.
விசாரணையில் அவர், பீகாரைச் சேர்ந்த நவாஸ் கரீம் (40) என்று தெரியவந்தது. ரயில்வேயில் போர்ட்டராக வேலை செய்வது தெரியவந்தது. அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.