பெண்களின் உள்ளாடைகளைக் குறிவைத்து திருடும் சைக்கோ: பெங்களூருவில் பரபரப்பு!


சிசிடிவி காட்சியில் சிக்கிய சைக்கோ.

பெங்களுருவில் ஆளில்லாத வீடுகளுக்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் மர்மநபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உள்ளாடைகளைத் திருடி விட்டு அநாகரீமான செயலில் அந்த நபர் ஈடுபடும் வீடியோ காட்சியும் தற்போது சிக்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு லாகேரே அருகே உள்ள விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போனது. மொட்டை மாடிகளில், ஆளில்லாத வீடுகளில் காயப்போடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மற்றும் ரவிக்கைகள் தொடர்ந்து காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் ராஜகோபால்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து விதான் சௌதா பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், விதான் சௌதா லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து உள்ளாடைகளை திருடிக் கொண்டு ரகசியமாக மொட்டை மாடிக்குச் சென்று அநாகரீக செயலில் ஈடுபடும் என மர்மநபரின் சிசிடிவி காட்சி தற்போது சிக்கியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சைக்கோ துவைத்துக் காயப்போடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள், ரவிக்கைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அநாகரீமான செயலில் ஈடுபடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் மீது ராஜகோபால்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோவால் பெங்களூருவில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

x