அதிர்ச்சி... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... ஐசிஎம்ஆர் பரபரப்பு புகார்... சிபிஐ விசாரணை!


ஆதார்

டார்க் வெப்பில் 81 கோடி இந்தியரின் ஆதார் தரவுகள் கசிந்துள்ளதால் ஆதார் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையைத் தொடக்கியுள்ளது.

கோவின் தளம் - ஆதார் தகவல்

இதுவரை நாட்டிலேயே நடந்திராத அளவில் மிகப்பெரிய "தரவு கசிவு" (Data Leak) வழக்கு என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) உள்ள 81.5 கோடி இந்தியர்களின் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 81.5 மில்லியன் இந்திய குடிமக்களின் பதிவுகளை உள்ளடக்கிய தரவுகள் டார்க் வெப்பில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும். அதில் ICMRல் இருந்து பெறப்பட்ட கோவிட்-19 சோதனை விவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பயனர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல்கள் அடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஐசிஎம்ஆர் புகார் அளித்துள்ள நிலையில் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

x