விரைவு ரயிலில் சிக்கிய வெள்ளிப்பொருட்கள்... வாக்காளர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதா?


ரூ.19 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலில் போலீஸார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 19.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயிலில் போலீஸார் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி, 19.5 கிலோ எடையிலான வெள்ளிப்பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.

செங்கல்பட்டில் ரயில்வே போலீஸார் நடவடிக்கை

இதன் மதிப்பு ரூ.19 லட்சம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கமலேஷ், லோகேஷ் ஆகிய இருவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோழன் விரைவு ரயில் (கோப்பு படம்)

தெலங்கானா உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருளாக வழங்க எடுத்து செல்லப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

x