பெட்ரோல் பங்க் பாக்ஸில் இருந்து மாயமான ரூ.50 ஆயிரம்: சிசிடிவியைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி


பெட்ரோல் பங்கில் ரூ.50 ஆயிரம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பெட்ரோல் போடுவது போல் வந்தவர், திடீரென பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இங்கு ஊழியர்கள் ஒவ்வொரு ஷிப்ட் முடிந்ததும், தங்கள் கையில் இருக்கும் பெட்ரோல் போட்ட பணத்தை எண்ணி அங்குள்ள கலெக்சன் பெட்டியில் வைத்துவிட்டு கணக்குக் கொடுப்பார்கள்.

இந்நிலையில் இந்த கல்லாப் பெட்டியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் திடீரென மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் போடுவது போல் டூவீலரில் வரும் வாலிபர் ஒருவர், கூட்டமாக இருக்கும் பீக் ஹவர்ஸ் நேரத்தில் பெட்டியில் இருந்து பணத்தைத் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் ஆறுமுகம் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x