மின் உற்பத்தி நிலையத்தில் நீராவி குழாய் வெடித்து விபத்து: 19 பேர் படுகாயம்: 5 பேர் சீரியஸ்!


வெடித்த நீராவி குழாய்.

ஒடிசாவில் டாடா எஃகு மின் உற்பத்தி நிலையத்தில் நீராவி குழாய் திடீரென வெடித்ததில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதில் 5 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஒடிசா மாநிலம் தேன்கனலில் உள்ள மேரம்ண்டலி பகுதியில் டாடா எஃகு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு இன்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பிற்பகல் 1 மணியளவில் உற்பத்தி நிலையத்தில் இருந்த நீராவி குழாய் ஒன்று திடீரென வெடித்தது. அப்போது வெடி உலையை ஆய்வு செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது வெந்நீர் கொட்டியது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 5 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எரிவாயு குழாய் வெடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது.

x