ஆவடி | இணையவழி வர்த்தகம் மூலம் 300% லாபம் எனக்கூறி ரூ.1.36 கோடி மோசடி செய்த 2 பேர் கைது


ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (41). தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியரான இவர், தன் சமூக வலைதள பக்கத்தில் வந்த, இணையவழி வர்த்தகம் செய்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்து, லைக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம்11-ம் தேதி அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு இணையவழி வர்த்தகம் குறித்து லிங்க் வந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்க் மூலம் ரூ. 4 லட்சம்முதலீடு செய்து ரூ.36,000 எடுத்துள்ளார். குறிப்பிட்ட 3 நிறுவனங்களின் இணைய வழி வர்த்தகத்தில் 300 சதவீதம் லாபம்கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்த கார்த்திக்கிடம், தரகு தொகையான ரூ.27 லட்சம் செலுத்தாவிட்டால், வங்கி கணக்கு முடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கார்த்திக் ரூ.28 லட்சத்தை தன் வங்கிகணக்கு வாயிலாக செலுத்தியுள்ளார். மேலும், மர்ம நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கிகணக்குகளுக்கு, பல தவணைகளில் ரூ.1,36,40,479-ஐ செலுத்தியுள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில்பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38), ராணிப்பேட்டை மாவட்டம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருண் (30) ஆகியோரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.

x