மறக்க மனம் கூடுதில்லையே... காதலியின் நினைவு நாளில் தற்கொலை செய்த காதலன்!


சோகம் (கோப்பு படம்)

காதலி இறந்து இரண்டு வருடங்களாகியும் அவரை மறக்க முடியாத காதலன், அவரது நினைவு நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பதினெட்டான் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அறியாசெல்வம் (21). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவரும், திருப்புவனம் அருகேயுள்ள மணலூரைச் சோந்த ஒரு பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால், அவரை மறக்க இயலாமல் அறியாசெல்வம் சோகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் காதலியின் இரண்டாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. காதலியை நினைத்து கதறி அழுத அறியாசெல்வம் வீட்டில் யாரும் இல்லாத நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

உடல்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை போலீஸார், அறியாசெல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த நாளில் காதலன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x