உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்


சிவகங்கை: சிவகங்கையில் காவல் உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு, தப்பிய ரவுடியை போலீஸார் சுட்டுப்பிடித்தனர். அவரிடம் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காளையார்கோவில் காவல் ஆய்வாளர் ஆடிவேல், உதவி ஆய்வாளர் குகன்தலைமையிலான போலீஸார் காளக்கண்மாய் அருகே கல்லல் சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்தகாரை வழிமறித்தபோது, அதிலிருந்து வெளியே வந்த, திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தத்தை சேர்ந்த ரவுடி அகிலன் (24), உதவி ஆய்வாளர் குகனை வாளால் வெட்டிவிட்டு, தப்பியோட முயன்றார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவரை காலில் சுட்டுப் பிடித்தார். மேலும், காரையும், அதிலிருந்த 22 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

காயமடைந்த அகிலன், உதவிஆய்வாளர் குகன் ஆகியோர்சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், அகிலன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காயமடைந்த உதவி ஆய்வாளர்குகனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன்உமேஷ் சந்தித்து, ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாககாளையார் கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

5 கொலை வழக்குகள்: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "2018-ல் கச்சநத்தத்தில் 3 பேரை கொலை செய்தது, 2023-ல் மதுரை ஒத்தக்கடையில் அழகுபாண்டி என்பவரை கொலை செய்தது, திருப்புவனத்தில் 2020-ல் ஆட்டோ ஓட்டுநர் விஜய், 2022-ல்பாலாஜி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒருவர் என அகிலன் மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், சிவகங்கை, மதுரை,திண்டுக்கல், திருவண்ணாமலைமாவட்டங்களில் அவர் மீதுகொலை முயற்சி, கஞ்சா விற்பனை, அடிதடி உட்பட மொத்தம் 22வழக்குகள் நிலுவையில் உள்ளன.தலைமறைவாக இருந்த அகிலனைகடந்த 10 மாதங்களாக தேடி வந்தோம்" என்றனர்.

இதற்கிடையே அகிலனின் தங்கை, தனது சகோதரர் அகிலனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்யப்போவதாக பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x