முந்திரி, பிஸ்தாவுடன் கலந்தும், நாப்பினில் வைத்தும் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் இன்று வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் கொண்டு வந்த பார்சலை சோதனை செய்தபோது முந்திரி, பிஸ்தா இருந்தது. இதற்குள் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பார்சலை மேஜையில் கொட்டி தங்கக்கட்டிகளை எடுத்தனர்.
முந்திரி, பிஸ்தா பருப்புகளுடன் கலந்து கேப்சூல் வடிவிலும், ஓவர்கோட்டில் பேஸ்ட் வடிவிலும் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ரூ.67.56 லட்சம் மதிப்புள்ள 1133 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் திருச்சி விமான நிலையத்திலும் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் பையில் நாப்கின் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கிடமான நாப்கினை பிரித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நாப்கினில் இருந்த 612 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.37.58 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.