கெட்டுப்போன பிரியாணி… வாடிக்கையாளர் அதிர்ச்சி; பிரபல கடைக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்


கெட்டுப்போன பிரியாணி

திருச்சி உறையூரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ. இவர் திருச்சி - கரூர் சாலையில் அமைந்துள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆசையுடன் சாப்பிட அமர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு டெலிவரி கொடுக்கப்பட்ட பிரியாணி கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது. இதனால், கோபமான ஆண்ட்ரூ உடனடியாக உணவகைத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். ஆனால் பிரியாணி கடை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து, நேராக கடைக்கு சென்ற அவர் ஆர்டர் செய்த பிரியாணியை காண்பித்துள்ளார்.

அதற்கு கடை ஊழியர்கள் சூடான நிலையில் பேக் செய்ததால் பிரியாணி கெட்டிருக்கலாம் என்று மழுப்பலான பதிலை கூறியுள்ளனர். இதனால் கோவத்தில் உச்சிக்கே சென்ற ஆண்ட்ரூ, கெட்டுப்போன பிரியாணி தொடர்பாக உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். இதனையடுத்து, தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் மூன்று கிலோ கெட்டுப்போன இறைச்சி உணவுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நோட்டீஸ் அளித்த அதிகாரிகள், கடைக்கு அபராதம் விதித்து எச்சரித்து சென்றனர்.

x