பெண்களுக்கு சினிமா ஆசைகாட்டி மோசம்... ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் கைது!


அஸ்வின்

சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஐஏஎஸ் அகாடமி ஒன்றை நடத்தி வருபவர் அஸ்வின் என்கிற மெய்யழகன் (30). இவரது அகாடமியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு பயின்று வரும் பெண்களிடம் சினிமாவில் நடிக்கலாம், சினிமா வட்டார தொடர்பு தனக்கு இருக்கிறது, என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டிருக்கிறார் அஸ்வின். அப்படி நடப்பதை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை, அஸ்வினிடம் இதுகுறித்து விசாரித்திருக்கிரார். அத்துக்க் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அஸ்வினை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அஸ்வினிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், அவர் பல பெண்களுடன் ஆபாசமாக பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அஸ்வின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

x