அதிர்ச்சி... 500 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட பைக்; கார் மோதி தாய், தந்தை, 6 வயது மகன் உயிரிழப்பு


விபத்தில் மூவர் பலி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்திலிருந்து கல்பாக்கம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் தனசேகரன் என்பவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தை கார் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் தனசேகரன், அவரது மனைவி மற்றும் 6 வயது குழந்தை ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

உயிரிழந்த தனசேகரன் குடும்பத்தினர்

இதில் தனசேகரனும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக 6 வயது சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவனும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிவேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய கார்

காரை அதிவேகத்தில் இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரை ஓட்டிவந்த வினய் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

x