உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சட்டவிரோத பரிமாற்ற தடை சட்டத்தின் 45 வது பிரிவு பொருந்தாது என அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் அமைச்சர் தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதுவரை 7 முறைக்கு மேல் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிமன்றம், இன்று, ஸ்டான்லி மருத்துவமனை அளித்துள்ள செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை கருத்தினை பெற்று நீதிமன்றத்திற்கு அளிக்கவும், ஜாமீன் மனு குறித்து, பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் செந்தில்பாலாஜி, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனால் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும் அமைச்சர் தரப்பு வாதிட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் 45வது பிரிவு பொருந்தாது எனவும் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் விரிவான எதிர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில்பாலாஜி ஆரோக்கியமாக உள்ளதாகவும், உடல்நிலை சரியில்லை என கூறுவது, ஜாமீன் பெறுவதற்கான ஒரு தந்திரம் மட்டுமே எனவும் கூறியுள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!