டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா?


டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் முடிவடைய இருக்கும் நிலையில் அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த மாதம் 17ம் தேதி காஞ்சிபுரம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் ரைடிங் சென்றபோது, ஆபத்தான முறையில் வீலிங் செய்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், கடுமையான விபத்தில் சிக்கினார். கையில் காயத்துடன் மட்டும் தப்பிய வாசன் மீது அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் கேட்டும், அவரது மனு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில், வாசனின் ஓட்டுநர் உரிமம் 06.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

டிடிஎஃப் வாசன்

மேலும், வாசன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் உரிய மருத்துவம் அளிக்க வேண்டும் எனவும் யூடியூப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடுங்கள் எனவும் நீதிபதி சமீபத்தில் அவரது ஜாமீன் மனு கோரிக்கையை நிராகரித்துவிட்டு எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x